சினிமா செய்திகள்

‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ + "||" + Actress Shakila will acting the social worker in movie 'Kunrathile kumaranukku kondattam'

‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’

‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’
நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாக ஊரை சுற்றும் ஒரு இளைஞன், ஒரு சந்தர்ப்பத்தில் பிரச்சினையில் சிக்குகிறான். அதில் இருந்து அவன் எப்படி வெளியே வருகிறான்? என்பதை கருவாக வைத்து, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
கவர்ச்சி நடிகை ஷகிலா சமூக சேவகியாக இதில் நடிக்கிறார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி ரியாமிகா யோகா டீச்சராக வருகிறார். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ‘சாதக பறவைகள்’ சங்கர் ராம், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். பாடல்களை வைரபாரதி எழுதியுள்ளார்.

தயானந்தன் டைரக்டு செய்ய, ஐ.ராஜா தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற்றது.