சினிமா செய்திகள்

தயாரிப்பாளருடன் மோதல்: ஓட்டலுக்கு பணம் கொடுக்காமல் ஓடினேனா? -நடிகை மெஹ்ரின் + "||" + Did you run without paying for the hotel? - Actress Mehrin

தயாரிப்பாளருடன் மோதல்: ஓட்டலுக்கு பணம் கொடுக்காமல் ஓடினேனா? -நடிகை மெஹ்ரின்

தயாரிப்பாளருடன் மோதல்:  ஓட்டலுக்கு பணம் கொடுக்காமல் ஓடினேனா?  -நடிகை மெஹ்ரின்
ஓட்டலுக்கு பணம் கொடுக்காமல் சென்றதாக வெளியான தகவல் குறித்து நடிகை மெஹ்ரின் விளக்கம் அளித்தார்.
தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரின். சமீபத்தில் திரைக்கு வந்த பட்டாஸ் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மெஹ்ரின் சமீபத்தில் தான் நடித்த ‘அஸ்வதாமா’ என்ற தெலுங்கு படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஐதராபாத்துக்கு வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

கடைசி நேரத்தில் விழாவுக்கு செல்ல மறுத்ததால் ஓட்டலில் தங்கிய வாடகை தொகையை மெஹ்ரினே கட்ட வேண்டும் என்று தயரிப்பாளர் கூறி விட்டதாகவும், ஆனால் அவர் வாடகையை கொடுக்காமலேயே ஓடி விட்டதாகவும், பின்னர் தயாரிப்பாளரே அந்த வாடகையை செலுத்தியதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து மெஹ்ரின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“அஸ்வதாமா திரைப்பட வேலையாக நான் தங்கிய ஓட்டல் செலவுகள் பற்றி வெளியான தகவல்கள் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டதால் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. இது தயாரிப்பாளருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால் நான் தங்கிய ஓட்டலுக்கு வாடகையை செலுத்த மறுத்தனர்.

எனது மேனேஜரிடம் பணத்தை செலுத்தும்படி கூறினேன். அதன்பிறகு கட்டணம் செலுத்தப்பட்டது. ஓட்டல் செலவு குறித்து வெளியான செய்தியால் கவலை அடைந்தேன். இது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி.”

இவ்வாறு மெஹ்ரின் கூறியுள்ளார்.