சினிமா செய்திகள்

‘தேரும் போரும்’ + "||" + Chariot and War

‘தேரும் போரும்’

‘தேரும் போரும்’
‘மதயானை கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்த டைரக்டர் விக்ரம் சுகுமாரன் அடுத்து, ‘தேரும் போரும்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகனாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கிறார்.
ஒரு தேர் திருவிழாவையும், அதை சார்ந்து இரு பிரிவினருக்கு இடையே நடக்கும் மோதலையும் மையமாக வைத்து தயாராகும் படம், இது. காதல், குடும்ப உறவுகள், அதிரடி சண்டை காட்சிகளை உள்ளடக்கிய படமாக இருக்கும். மஞ்சு விளையாட்டு நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. தினேஷ் மாடு பிடி வீரராக வருகிறார்.

மைனா, கும்கி, பைரவா, ஸ்கெட்ச் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படப் பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி, சிவகங்கை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நடைபெறுகிறது. நடிகர் அருள்தாஸ், கார்த்திக் துரை ஆகிய இருவரும் இந்த படத்தை தயாரிக் கிறார்கள்.