சினிமா செய்திகள்

இந்தி ‘கைதி’யில் அஜய்தேவ்கான் + "||" + Ajaydev Khan in Hindi Kaithi

இந்தி ‘கைதி’யில் அஜய்தேவ்கான்

இந்தி ‘கைதி’யில் அஜய்தேவ்கான்
இந்தி கைதியில் கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து திரைக்கு வந்த ‘கைதி’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மட்டுமே மையப்படுத்தி அதிரடி கதையம்சத்தில் வந்த இந்த படத்தின் வெற்றி, திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதுகுறித்து கார்த்தி கூறும்போது, “30 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் கைதி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவதாகவும், கதை தயாராக உள்ளது என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார். படத்துக்கு இந்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. உங்களுக்காக டில்லி திரும்ப வருவான்” என்றார்.

கைதி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் ‘கைதி’ படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தி கைதியில் கார்த்தி வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்கிறார். இதனை அவரே டுவிட்டரில் நேற்று அறிவித்தார்.

இந்தி கைதி படத்தை லோகேஷ் கனகராஜே இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் டைரக்டு செய்வாரா என்பது உறுதியாகவில்லை. லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.