சினிமா செய்திகள்

‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது + "||" + Vikram's 7 appearances have been released

‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது

‘கோப்ரா’ படத்தில் நடிக்கும்  விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது
‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.
கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் கோப்ரா. இந்த படத்தை அஜய் ஞானமுத்து  இயக்குகிறார். இவர் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி வெற்றி படங்களை கொடுத்தவர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

கோப்ரா படத்தில் கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோப்ரா படத்தில் விக்ரம் 12-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் அவரது 7 தோற்றங்களை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

இந்த தோற்றங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு தோற்றத்தின் பின்னாலும் ஒரு கதை இருப்பதுபோல் போஸ்டரை உருவாக்கி உள்ளனர். இதில் வயதான தோற்றங்களும் உள்ளன. இந்த தோற்றங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே அந்நியன், ஐ படங்களில் விக்ரமின் வித்தியாசமான தோற்றங்கள் பேசப்பட்டன.

அதுபோல் கோப்ராவும் அவருக்கு முக்கிய படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.