சினிமா செய்திகள்

50 கதைகளை நிராகரித்த ராஷ்மிகா + "||" + 50 stories Rejected Rashmika

50 கதைகளை நிராகரித்த ராஷ்மிகா

50 கதைகளை நிராகரித்த ராஷ்மிகா
தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-


“திரையிலும், திரைக்கு பின்னாலும் எப்போதும் உஷாராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பேன். மற்றவர்களை பேசவிடாமல் நானே பேசிக்கொண்டு இருப்பேன். தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுப்பதாக பலரும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வீட்டில் பசுமாடுகள், வாத்து, கோழிகள் வளர்க்கிறேன். வீட்டை சுற்றி காப்பி தோட்டங்கள் விவசாய நிலங்கள் உள்ளன.

அப்படி ஒரு அமைதியான சூழலில்தான் வளர்ந்தேன். வீட்டில் இருந்தாலே மனதுக்கு சந்தோஷம் வரும். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால்தான் எனக்கு பெயர் கிடைத்துள்ளது. சினிமாவுக்கு வந்து சிறிது காலம்தான் ஆகிறது. இந்த காலகட்டத்தில் நான் கேட்டவற்றில் 50-க்கும் மேற்பட்ட கதைகளை நன்றாக இல்லை என்று நிராகரித்து இருக்கிறேன்.

நான் கடுமையாக உழைத்து இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்கள் தோற்கின்றன. ஆனால் ராஷ்மிகா படங்கள் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம் என்று சிலர் பேசுகிறார்கள். அதிர்ஷ்டத்தால் நிச்சயம் இல்லை. அதற்கு பின்னால் எனது உழைப்பு நிறைய இருக்கிறது.” இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.