சினிமா செய்திகள்

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் + "||" + This week 7 Release Movies

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்
இந்த வாரம் வருகிற வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும், மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் திரையிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.


இந்த வாரம் வருகிற வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன. பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ளனர். முகில் செல்லப்பன் இயக்கி உள்ளார். இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது.

ஜிப்ஸி படத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. தணிக்கை குழுவும் அனுமதி மறுத்தது. பின்னர் மேல் தணிக்கைக்கு சென்று சான்றிதழ் பெற்று திரைக்கு வருகிறது. ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

காலேஜ் குமார் படத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ஹரி சந்தோஷ் இயக்கி உள்ளார். எட்டுத்திக்கும் பற படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி நடித்துள்ளனர். வெல்வெட் நகரம், வரலட்சுமி சரத்குமாரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து தயாராகி உள்ளது. மனோஜ்குமார் நடராஜன் இயக்கி உள்ளார்.