சினிமா செய்திகள்

வைரலாகும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் + "||" + The viral look of Keerthi Suresh

வைரலாகும் கீர்த்தி சுரேஷ் தோற்றம்

வைரலாகும் கீர்த்தி சுரேஷ் தோற்றம்
சாவித்திரி வாழ்க்கை கதையை வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.
நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

சம்பளத்தையும் உயர்த்தினார். கடைசியாக விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் 2018 நவம்பரில் திரைக்கு வந்தது. அதன் பிறகு படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் பென்குயின் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தி படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்தி ரசிகர்கள் ஒல்லியான நடிகைகளையே விரும்புகிறார்கள் என்று கருதி கீர்த்தி சுரேசும் உடல் எடையை கணிசமாக குறைத்து ஆளே மாறினார். இதனால் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை என்று அந்த படத்தில் இருந்தே நீக்கி விட்டனர்.

இந்த நிலையில் பாரம்பரிய மலையாள பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேசின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்ற சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அந்த படத்தின் தோற்றம்தான் இது என்று கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 66-வது படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம். ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார்.
2. திருமண வதந்தியால் கீர்த்தி சுரேஷ் காட்டம்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
3. தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
தொழில் அதிபருடன் எனக்கு திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்.