தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’


தீபாவளி விருந்தாக   சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’
x
தினத்தந்தி 6 March 2020 4:30 AM IST (Updated: 5 March 2020 7:33 PM IST)
t-max-icont-min-icon

சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சூர்யா இதுவரை 38 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 39-வது  படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஹரி டைரக்டு செய்கிறார். சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படம், இது. ஹரி இயக்கும் 16-வது படம்.

டி.இமான் இசையமைக்கிறார். சூர்யாவுடனும், ஹரியுடனும் இவர், முதல் முறையாக இணைகிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கி, ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடையும். வருகிற தீபாவளி விருந்தாக படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக் கிறார்கள்.

Next Story