சினிமா செய்திகள்

25 கிலோ எடை குறைத்து நடிக்கிறார்; அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி + "||" + Reducing the weight of 25 kg and acting ;Vijay Sethupathi in Aamir Khan movie

25 கிலோ எடை குறைத்து நடிக்கிறார்; அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி

25 கிலோ எடை குறைத்து நடிக்கிறார்;  அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி
தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவனுடன் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். வேறு மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகின்றன.
சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடனும், மார்கோனி மதாய் என்ற மலையாள படத்தில் ஜெயராமுடனும் நடித்துள்ளார். அமீர்கானுடன் ‘லால் சிங் சத்தா’ என்ற இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. 

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்’ படத்தின் இந்தி ரீமேக் ஆக லால் சிங் சத்தா தயாராகிறது.

இந்த படத்தில் அமீர்கான் உடல் எடையை 21 கிலோ குறைத்து நடிக்கிறார். அவரது தோற்றம் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் விஜய் சேதுபதியும், லால் சிங் சத்தா படத்தில் 25 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதுபதி கைவசம் தற்போது லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட 6 படங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்
விஜய்சேதுபதி, நந்திதா ஜோடியாக நடித்து 2012-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பெரிய வெற்றி பெற்றது. முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.
2. விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?
தேசிய அளவில் பிரபலமாகி இருக்கும் டைரக்டர் வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
3. முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
4. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.