18 வயது குறைந்த நடிகையுடன் அஜித் பட வில்லன் நடிகர் காதல்


18 வயது குறைந்த நடிகையுடன் அஜித் பட வில்லன் நடிகர் காதல்
x
தினத்தந்தி 9 March 2020 3:45 AM IST (Updated: 9 March 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் தேவுக்கும், இந்தி நடிகை முக்தா கோட்சேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. முக்தா தமிழில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமியின் காதலியாக நடித்து இருந்தார்.

தமிழில் விஜயகாந்தின் நரசிம்மா, அர்ஜூனுடன் பரசுராம், ஜெய்ஹிந்த்-2, ஜெயம் ரவியின் மழை, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். இவருக்கு தற்போது 49 வயது ஆகிறது.

ராகுல் தேவின் மனைவி ரினா கடந்த 2009-ல் புற்றுநோயால் இறந்து போனார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ராகுல் தேவுக்கும், இந்தி நடிகை முக்தா கோட்சேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. முக்தா தமிழில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமியின் காதலியாக நடித்து இருந்தார். இந்தியிலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு 31 வயது ஆகிறது. இருவருக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது.

முக்தாவுடன் ஏற்பட்டுள்ள காதலை ராகுல் தேவ் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, “எனக்கும் முக்தாவுக்கும் உள்ள காதல் மறைந்த எனது மனைவியின் குடும்பத்தினருக்கு தெரியும். ஒரு திருமண விழாவில் இருவரும் சந்தித்து நட்பானோம். அதன்பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களுக்கு இருக்கும் வயது வித்தியாசம் காதலுக்கு தடையாக இல்லை” என்றார்.

ஏற்கனவே பையா, பச்சைக்கிளிமுத்துச்சரம், வித்தகன் படங்களில் நடித்த 52 வயது வில்லன் நடிகர் மிலிந்த் சோமனுக்கும், 26 வயது அங்கிதா கொன்வருக்கும் திருமணம் நடந்தது.

Next Story