சினிமா செய்திகள்

என்னை புரிந்து கொள்பவரை “காதல் திருமணம் செய்து கொள்வேன்” -நடிகை திரிஷா + "||" + I will get love married - Actress Trisha

என்னை புரிந்து கொள்பவரை “காதல் திருமணம் செய்து கொள்வேன்” -நடிகை திரிஷா

என்னை புரிந்து கொள்பவரை “காதல் திருமணம் செய்து கொள்வேன்”  -நடிகை திரிஷா
காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை திரிஷா கூறினார்.
தென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களாக கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் திரிஷா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொள்ளாததால் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த நிலையில் ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கேள்வி:- தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் தொந்தரவு கொடுப்பதாக சொல்கிறார்களே?

பதில்:- அந்த பழக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இல்லை. வரச்சொன்ன நேரத்துக்கு வந்து படப்பிடிப்பு முடிவது வரை இருப்பது எனது பழக்கம். படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்கு வந்து விடுவேன். சமீபத்தில் எதிர்பாராமல் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிக்கு நேரம் கொடுத்ததால் சில சர்ச்சைகள் வந்தன.

கேள்வி:- உங்கள் திருமணம் பற்றி சொல்லுங்கள்.

பதில்:- நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னேனே தவிர எப்போது செய்து கொள்வேன் என்று சொல்லவில்லை. திருமண விஷயத்தில் குடும்ப பெரியவர்கள் சொல்லும் பேச்சை கேட்க மாட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையையும் மணக்க மாட்டேன். காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

கேள்வி:- எந்த மாதிரி மனிதரை மணக்க விரும்புகிறீர்கள்?

பதில்:- என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். அவர் ஹீரோ போன்றோ அல்லது அழகானவராகவோ இருக்க அவசியம் இல்லை. நிறம் விஷயத்திலும் ஆட்சேபனை இல்லை. ஆனால் நல்ல மனது இருக்க வேண்டும். என்னை புரிந்துகொள்பவராகவும், நன்றாக பார்த்துக்கொள்பவராகவும் இருக்க வேண்டும். அந்தமாதிரி மனிதர் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.