மாநில செய்திகள்

சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும்- ரஜினிகாந்த் + "||" + Without changing the system Getting into politics Without washing the dish with the fish broth Such as placing sugar pongal Rajinikanth

சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும்- ரஜினிகாந்த்

சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும்- ரஜினிகாந்த்
சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும் என ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை

தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று நான் கடந்த வாரம் கூறியிருந்தேன். என்னுடன் பேசிய விவகாரத்தை மாவட்டச் செயலாளர்கள் வெளியிடவில்லை. மாவட்ட செயலாளர்கள்  சந்திப்பு குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு. அதுபோல் என்னுடைய அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை இப்போது கூற உள்ளேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1995 முதல் அரசியலுக்கு வர உள்ளதாக நான் ஒரு போதும் கூறியது இல்லை. அரசியல் வருகை குறித்து நான் முதன்முறையாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படையாக பேசினேன்.

ஒருவேளை அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று 1996 முதல் யோசித்துக் கொண்டிருந்தேன். 2016-2017களில் தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். அரசியலுக்கு வர உள்ளதை அறிவித்த பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று கூறினேன்

சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சை,ஓய்வுக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்
சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் ரஜினிகாந்த் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.
2. ‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்
‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.
3. மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. தூத்துக்குடி ‘‘துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை’’ ஒருநபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில்
‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை’’ என்று ஒருநபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளதாக ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.
5. ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார் ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.