மாநில செய்திகள்

கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்- ரஜினிகாந்த் + "||" + With the slogan of political change and regime change People forum administrators We need to meet people Rajinikanth's appeal

கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்- ரஜினிகாந்த்

கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்- ரஜினிகாந்த்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை

தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை. 

ஆட்சிக்கு வரவேண்டிய நிர்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலை எதிர்கொள்கிறார்.  ஆளுமைமிக்க தவைரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை சந்திக்க வேண்டும்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை, முழு கஜானாவுடன் இருப்பவர்களை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டும்

அசுர பலத்துடன் இருக்கும் 2 மிகப்பெரிய ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

தமிழ் மண் புரட்சிகளுக்கு பெயர் பெற்ற மண். மக்களில் சிலரிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. அரசியல் அறிவில்லாமல் இருக்கின்றனர். மக்கள் அலைக்கு முன்பாக அசுரபலம் ஒன்றுமில்லை .

திமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் வாக்களித்தனர்

அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் ஜெயலலிதாவுக்காகவும் வாக்களித்தனர்

2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும்

தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும் நான் அரசியலுக்கு வந்து என்ன பலன்?

நான் அரசியலுக்கு வரவில்லை என்று கிண்டல் செய்வார்கள், விமர்சிப்பார்கள், வேறு என்ன செய்ய முடியும்?

இப்போதே 71 வயதாகிவிட்டது, அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வருகிறேன் என்று எப்படி செயல்பட முடியும்?

என்னுடைய கட்சி நிர்வாகிகள் நான் கூறியதை ஏற்று மக்களை சந்திக்க வேண்டும்

அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும்

மக்களிடம் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த உடன் நான் அரசியலுக்கு வருகிறேன்.

கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்  என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
2. நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்
கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின்.
3. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
4. கொரோனா பாதிப்பு: டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை நடிகர் சோனு சூட் வழங்கி உள்ளார்.
5. எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா? தமன்னா வருத்தம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.