மாநில செய்திகள்

என்ன பேசினார் ரஜினிகாந்த்? கட்சி தொடங்குவாரா ...! அரசியலுக்கு வருவாரா...! மீண்டும்... !!! + "||" + What was Rajinikanth talking about? Will the party begin ...! Come to politics ...! Again !!!

என்ன பேசினார் ரஜினிகாந்த்? கட்சி தொடங்குவாரா ...! அரசியலுக்கு வருவாரா...! மீண்டும்... !!!

என்ன பேசினார் ரஜினிகாந்த்? கட்சி தொடங்குவாரா ...! அரசியலுக்கு வருவாரா...! மீண்டும்... !!!
ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை

கடந்த வாரம் தமது மாவட்டச் செயலாளர்களை சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் ஆலோசனையின் போது ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் இருந்ததாக கூறியிருந்தார்.

இது குறித்து பல்வேறு மட்டத்தில் பல்வேறு  விவாதங்கள் எழுந்தது.  இந்த நிலையில், இன்று காலை  எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார்  நட்சத்திர ஓ ட்டலில் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை  சந்தித்து பேச உள்ளதாக கூறினார். 

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில்  ரசிகர் மன்ற மாநாடு தொடர்பாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநாட்டுக்கான இடம், தேதி ஆகியவை இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்  அது குறித்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல்  என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் எனும் முழக்கத்தோடு ரசிகர்கள் மக்களை சந்திக்க வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன் என்று ரஜினி கேள்வி விடுத்து உள்ளார்.அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்... இப்போ இல்லன்னா இனி எப்பவும் இல்லை என கூறினார்.

தலைவரின் சொல்லை கேட்பவன்தான்  சிறந்த தொண்டன். வருங்கால முதல்வர் ரஜினி என்ற கோஷத்தை முதலில் நிறுத்துங்கள் என கூறினார்.

சுமார் அரை மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி அவர்களிடம் கேள்விகளை எதிர்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்.

அரசியல் மாற்றத்திற்கான 3 திட்டங்களை ரஜினிகாந்த் கூறி உள்ளார். அந்த திட்டங்கள் 

திட்டம்1: 

தேர்தல் பணி செய்ய கட்சியில் உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்தபடும்

திட்டம் 2:

60 முதல் 65 சதவீதம் 50வயதுக்கு கீழ் உள்ள நல்ல மனிதர்களுக்கும், 35 முதல் 40 சதவீதம் வேறு கட்சியில் இருக்கும் வாய்ப்பு கிடைக்காத நல்ல மனிதர்களுக்கும்,மீதமுள்ளவர்களில் ஓய்வுபெற்ற நீதிபதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றோர்கள் புது சக்தி சட்டமன்றத்திற்குள் சென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் அதற்கு ரஜினிகாந்த் பாலமாக இருப்பேன். 

திட்டம் 3:

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை வேண்டும் என்பதே என் திட்டம் ஆட்சியில் தவறு செய்தால் கட்சித்தலைமை தூக்கி எறியலாம்; அவசியமான பதவிகள் மட்டுமே என் கட்சியில் இருக்கும்
கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
2. துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை - நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு
எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
4. ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு: கவிஞர் வைரமுத்து வாழ்த்து
ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 ஆம் ஆண்டு நிறைவு செய்வதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.