திடுக்கிடும் திருப்பங்களுடன் மர்மங்கள் நிறைந்த `சூர்ப்பனகை'
மரத்தை சுற்றி டூயட் பாடும் கதாநாயகியாக அல்லாமல், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் கதாநாயகிகளில், ரெஜினா கசன்ட்ராவும் ஒருவர்.
ரெஜினா கசன்ட்ரா நடித்த `எவரு' என்ற தெலுங்கு படம், ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதையடுத்து, `திருடன் போலீஸ்' பட புகழ் டைரக்டர் கார்த்திக் ராஜு டைரக்ஷனில், ரெஜினா நடிக்கிறார்.
இது, ஒருவகையான திகில் கதை. திடுக்கிடும் திருப்பங்களும், மர்மங்களும் நிறைந்த படம். படத்துக்கு, `சூர்ப்பனகை' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் கார்த்திக் ராஜு கூறுகிறார்:-
``இந்த படம் கனமான கதையம்சம் கொண்ட படம் என்பதை `சூர்ப்பனகை' என்ற பெயரே சொல்லும். படத்துக்கு சூர்ப்பனகை என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது என்பதை இப்போது சொல்ல முடியாது. இது திகில், திடுக்கிடும் திருப்பங்கள், சாகசங்கள் நிறைந்த படம் என்று சொல்லலாம். ரசிகர்களுக்கு திகில் அனுபவத்தை ஏற்படுத்தும்.
படத்தை ராஜசேகர் வர்மா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெறுகிறது.''
Related Tags :
Next Story