சினிமா செய்திகள்

அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்! + "||" + Starring in more films; Santhanam surpasses Vijay Sethupathi

அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!

அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!
``ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சந்தானம். அவருடைய திறமை, `மன்மதன்' படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தது. ஒரேநாளில் அவர் நகைச்சுவை நடிப்பில் உச்சத்தை அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தார்.
சந்தானத்துக்காக பெரிய பெரிய கதாநாயகர்கள் காத்திருந்தார்கள். `நம்பர் 1' நகைச்சுவை நடிகராக இருந்தபோதே அவர் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இன்று பல நடிகர்கள் ஆச்சரியப்படும் இடத்தில் இருக்கிறார்'' என்று அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட அதிபர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

``இந்த வருடம் சந்தானத்துக்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவர் கதாநாயகனாக ஒப்புக்கொண்ட படங்களை பார்க்கும்போது தெரிகிறது. விஜய் சேதுபதிதான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு பேச்சு, தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதை சந்தானம் முறியடித்து இருக்கிறார். விஜய் சேதுபதியை விட, சந்தானம் அதிக படங்களில் நடிக்கிறார்.

`டகால்டி' படத்தை தொடர்ந்து, சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் வளர்ந்து வருகின்றன. இதையடுத்து, `ஏ 1' படத்தை இயக்கிய ஜான்சன் டைரக்‌ஷனில் ஒரு படத்திலும், ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் ஒரு படத்திலும் `வஞ்சகர் உலகம்' படத்தை தயாரித்த நிறுவனம் புதிதாக தயாரிக்கும் படத்திலும் சந்தானம் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.''

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி!
கொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்
2. ஒரு தடுப்பூசி; ஓ மை கடவுளே - நடிகர் விஜய் சேதுபதி டுவீட்
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
3. `நல்ல' பெயர் சம்பாதிக்கும் நடிகர்!
விஜய் சேதுபதி தன் மீதான `இமேஜை' நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார்.
4. 25 கிலோ எடை குறைத்து நடிக்கிறார்; அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி
தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவனுடன் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். வேறு மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகின்றன.
5. `சகலகலா வல்லவன்’ போல் கமல்ஹாசன் வேடத்தில், சந்தானம்!
ஆர்.கண்ணன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம், `பிஸ்கோத்.’