சினிமா செய்திகள்

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன் + "||" + After 3 years Lakshmi Menon is again playing the role

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்
லட்சுமி மேனன். கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். கும்கி, சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. கடைசியாக விஜய் சேதுபதியுடன் லட்சுமி மேனன் நடித்த ‘றெக்க’ படம் 2016-ல் வெளிவந்தது. அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்வதாக கூறினார். சினிமாவை விட்டு விலகியது லட்சுமி மேனன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


3 வருடங்களுக்கு பிறகு லட்சுமி மேனன் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். முத்தையா இயக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக ‘கொம்பன்’, சசிகுமார் ஜோடியாக ‘குட்டிப்புலி’ படங்களில் லட்சுமி மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கார்த்திக்குடன் லட்சுமி மேனன் ஏற்கனவே ‘சிப்பாய்’ படத்தில் நடித்துள்ளார். முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் நடித்து இருந்தார். மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். கவுதம் கார்த்திக்-லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.