கொரோனா அச்சத்தால் திருமணத்தை நிறுத்திய நடிகை


கொரோனா அச்சத்தால் திருமணத்தை நிறுத்திய நடிகை
x
தினத்தந்தி 16 March 2020 12:35 AM GMT (Updated: 2020-03-16T06:05:39+05:30)

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. கேரளாவில் அதிகமானோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனாவால் கேரளாவில் நடிகை உத்தரா உன்னியின் திருமணம் நிறுத்தப்பட்டு உள்ளது. பரத நாட்டிய கலைஞரான இவர் தமிழில் ‘வவ்வால் பசங்க’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கொச்சியில் சொந்தமாக நடன பள்ளி நடத்தி வருகிறார். பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள்தான் உத்ரா உன்னி என்பது குறிப்பிடத்தக்கது. உத்ரா உன்னிக்கும், நிதேஷ் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்கள் திருமணத்தை கொச்சியில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திருமணத்தை தள்ளிவைத்து இருப்பதாக உத்ரா உன்னி குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். இதுபோல் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி மகனும் கன்னட நடிகருமான நிகிலுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்கள் திருமணத்தை ஒரு லட்சம்பேரை திரட்டி ஆடம்பரமாக நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். கொரோனாவால் திருமண ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டனர். திருமணத்தை குறைந்த எண்ணிக்கையில் விருந்தினர்களை அழைத்து எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Next Story