சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா மகன்


சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா மகன்
x
தினத்தந்தி 16 March 2020 12:38 AM GMT (Updated: 2020-03-16T06:08:47+05:30)

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், டேனியல், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் சிம்பு தாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிட்டனர். பின்னர் தயாரிப்பாளர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு படவேலைகள் தொடங்கி உள்ளன.

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், டேனியல், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், பாரதிராஜா மகன் மனோஜ் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

சிம்பு மற்றும் போலீஸ் அதிகாரி வேடத்தில் உள்ள மனோஜ் ஆகிய இருவரும் படப்பிடிப்பில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் சிம்பு, அப்துல் காலிக் என்ற பெயரில் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் 20 நாட்களாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் மோதும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த வருடம் இறுதியில் மாநாடு படம் திரைக்கு வருகிறது.

Next Story