சினிமா செய்திகள்

ஆனந்த கிருஷ்ணன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி + "||" + Vijay Antony in Ananda Krishnan's direction

ஆனந்த கிருஷ்ணன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி

ஆனந்த கிருஷ்ணன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி
‘மெட்ரோ’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர், ஆனந்த கிருஷ்ணன். இவர் அடுத்து டைரக்டு செய்யும் படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

‘உரு’ படத்துக்கு இசையமைத்த ஜோகன் இசையமைக்க, என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். டி.டி.ராஜா தயாரிக்கிறார். இவர், கந்தக்கோட்டை, வல்லக்கோட்டை ஆகிய படங்களை தயாரித்தவர்.

படத்தை வெளியிடும் உரிமையை தனஞ்செயன் வாங்கியிருக்கிறார். படப்பிடிப்பு கடந்த 13-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.