சினிமா செய்திகள்

‘ராஜவம்சம்’ படத்துக்காக “மூத்த நடிகர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருந்தது” - சசிகுமார் + "||" + It was a pleasure to play in senior actors for Rajavamsam movie - Sasikumar

‘ராஜவம்சம்’ படத்துக்காக “மூத்த நடிகர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருந்தது” - சசிகுமார்

‘ராஜவம்சம்’ படத்துக்காக “மூத்த நடிகர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருந்தது” - சசிகுமார்
கூட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லும் படமாக, ‘ராஜவம்சம்’ தயாராகி இருக்கிறது. சசிகுமார்-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
கதிர்வேலு டைரக்டு செய்திருக்கிறார். டி.டி.ராஜா தயாரித்துள்ளார். படத்தை பற்றி டைரக்டர் கதிர்வேலு கூறியதாவது:-

“இந்த படத்தின் கதையை கேட்டு சசிகுமார், ரொம்ப நன்றாக இருக்கிறது என்றார். தயாரிப்பாளர் கதையை கேட்டதும் என்னை ஒப்பந்தம் செய்தார். நான் யோசித்ததை திரையில் கொண்டுவர உதவினார். நடிகர்-நடிகைகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சசிகுமார், நிக்கி கல்ராணி ஆகிய இருவரிடம் மட்டுமே படத்தின் முழு கதையையும் சொன்னேன்” என்றார்.

‘ராஜவம்சம்’ கூட்டு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பமாக பார்க்கும்போது எல்லோருக்கும் பிடிக்கும். 40 நடிகர்கள் நடிப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் என்று கருதினோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். மூத்த நடிகர்-நடிகைகளுடன் நடித்தது, சந்தோஷமாக இருந்தது.

இத்தனை பேரையும் ஒளிப்பதிவாளர் கையாண்ட விதம், பாராட்டுக்குரியது. அனைவரையும் ஒன்று திரட்டுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. போகப்போக சரியாகி விட்டது. படத்தில் நடித்த அனைவரும் சிறந்த கதாபாத்திரங் களாக தெரிவார்கள்” என்றார் சசிகுமார்.


தொடர்புடைய செய்திகள்

1. பகைவனுக்கு அருள்வாய்: ஒரு கைதியின் கதை
‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘குட்டிப்புலி’, ‘சுந்தரபாண்டியன்’, ஆகிய படங்களில் உயிரோட்டமான கதாபாத்திரங்களில் நடித்த சசிகுமார், அடுத்து ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை அனீஸ் டைரக்டு செய்துள்ளார்.