சினிமா செய்திகள்

‘பூமி’ படத்தில் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி + "||" + Jayam Ravi as NASA scientist on 'Poom

‘பூமி’ படத்தில் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி

‘பூமி’ படத்தில் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம், ‘பூமி.’ இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் லட்சுமண் கூறியதாவது:-

“விவசாயத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருக்கிறது. ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நாசா விஞ்ஞானியாக வருகிறார். அவர் தஞ்சா வூருக்கு திரும்பி விவசாயத்தை காப்பாற்ற போராடுவதும் அதற்கு பின்னணியில் உள்ள சம்பவங்களும் கதை. நமது நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் இல்லை.

விவசாயிகளின் பிரச்சினைகளை படம் பேசும். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாய கதையாக இருந்தாலும் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலை வைத்து வணிக ரீதி படமாக எடுத்துள்ளோம். படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாக இது தயாராகி இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”