கொரோனா நோயால் பாதித்தவர்களுக்கு ஹாலிவுட் நட்சத்திர தம்பதி ரூ.7 கோடி உதவி


கொரோனா நோயால் பாதித்தவர்களுக்கு   ஹாலிவுட் நட்சத்திர தம்பதி ரூ.7 கோடி உதவி
x
தினத்தந்தி 18 March 2020 10:45 PM GMT (Updated: 2020-03-18T23:21:14+05:30)

ஹாலிவுட் நட்சத்திர தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி கொரோனா சிகிச்சைக்கு நிதியாக ரூ.7.42 கோடியை வழங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ், ஹாலிவுட் நடிகர்-நடிகை களையும் விட்டு  வைக்கவில்லை. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலஸ், டாம்குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஓல்கா குரிலென்கோவும், தனக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல் தோர், பசிபிக் ரிம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இத்ரி எல்பாவையும் கொரோனா தாக்கியது. “கொரோனா தாக்காது என்று யாரும் நினைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள். அடிக்கடி கையை கழுவுங்கள்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு நலநிதிகளும் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் ஹாலிவுட் நட்சத்திர தம்பதியான நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் ரூ.7.42 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளனர். பீடிங் அமெரிக்கா மற்றும் புட் பாங்க்ஸ் கனடா ஆகிய 2 அமைப்புகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிதியை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள ஏழைகள், முதியோர்களின் சிகிச்சைக்காகவும், அவர் களுக்கு உணவு வழங்குவதற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story