சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா? படக்குழு விளக்கம் + "||" + Vijay's Master Release 9?

விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா? படக்குழு விளக்கம்

விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா?  படக்குழு விளக்கம்
விஜய்யின் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மாஸ்டர் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

டப்பிங், ரீ-ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் படம் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்றும், இணைய தளங்களில் ஏற்கனவே தகவல் பரவி ரசிகர்களுக்கும், வினி யோகஸ்தர்களுக்கும் குழப் பத்தை ஏற்படுத்தியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.

படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் ஸ்டூடியோக்களில் விறுவிறுப்பாக நடக்கிறது என்றும், படம் ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகும் என்றும் அறிவித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் அடியோடு முடிங்கி உள்ளது. திரையரங்குகளை வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படங்களையும், திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் மாஸ்டர் படம் ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகாது என்று இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் மீண்டும் மறுத்துள்ளனர்.

திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ந்தேதி மாஸ்டர் படம் திரைக்கு வரும். அதற்கு முன்பாக நிலைமை சரியாகிவிடும் என்று அறிவித்து உள்ளனர்.