சினிமா செய்திகள்

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியுடன், `மிருகா' + "||" + Srikanth - Raai Laxmi at "Miruka''

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியுடன், `மிருகா'

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியுடன், `மிருகா'
ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள்.
``குரூர எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரன், பெண்களை ஏமாற்றி வாழ்ந்து வருகிறான். இப்படி ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் அவன் ஏமாற்ற முயற்சிக்கும்போது, விதி வேறுவிதமாக நினைக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் எல்லை மீறுகிறான். ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை `மிருகா' படத்தில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறோம்'' என்கிறார், டைரக்டர் ஜே.பார்த்திபன். தொடர்ந்து அவர் சொல்கிறார்:-

``இந்த படத்தில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு ஆகிய பொறுப்புகளை எம்.வி.பன்னீர்செல்வம் ஏற்க, பல டி.வி. தொடர்களை தயாரித்த பி.வினோத் ஜெயின் தயாரிக்கிறார். படம் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மூணாறு, தலக்கோணம் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.''