சினிமா செய்திகள்

`கன்னிமாடம்' படத்தை அடுத்து போஸ் வெங்கட் டைரக்‌ஷனில், 2-வது படம்! + "||" + Next to the movie of the kanni maadam, Bose Venkat Direction at 2nd movie

`கன்னிமாடம்' படத்தை அடுத்து போஸ் வெங்கட் டைரக்‌ஷனில், 2-வது படம்!

`கன்னிமாடம்' படத்தை அடுத்து போஸ் வெங்கட் டைரக்‌ஷனில், 2-வது படம்!
`சின்னத்திரை' கதாநாயகனாக இருந்த போஸ் வெங்கட், வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் முதன்முதலாக, `கன்னிமாடம்' என்ற படத்தை டைரக்டு செய்தார்.
`கன்னிமாடம்'  படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அவர் இரண்டாவதாக ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

``நீரின்றி அமையாது உலகு என்ற முது மொழிக்கேற்ப, மூன்றாம் உலகப்போர் வருமேயானால், அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளை புறந்தள்ளும் வகையில், இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சமுதாய கண்ணோட்டத்தோடு நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும் ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை கொண்ட படம், இது.

இதில், `உரியடி' புகழ் விஜயகுமார், பசுபதி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். `நான் மகான் அல்ல,' `அழகர்சாமியின் குதிரை,' `வெண்ணிலா கபடிக்குழு' ஆகிய படங்களின் கதாசிரியர் பாஸ்கர் சக்தி, இந்த படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதுகிறார். போஸ் வெங்கட் கதை எழுதி டைரக்டு செய்கிறார். எம்.பி.மகேந்திரன், பி.பாலகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.