சினிமா செய்திகள்

விஜய் படத்துடன் மோதும் சிறு பட்ஜெட் படம்! + "||" + Small budget movie is clashed with Vijay movie

விஜய் படத்துடன் மோதும் சிறு பட்ஜெட் படம்!

விஜய் படத்துடன் மோதும் சிறு பட்ஜெட் படம்!
விஜய் நடித்த `மாஸ்டர்' படம், அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதே தேதியில், `வேட்டை நாய்' என்ற சிறு பட்ஜெட் படமும் திரைக்கு வருகிறது.
`வேட்டை நாய்' படத்தில் ஆர்.கே.சுரேஷ்-ராம்கி ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு விஜய் நடித்த `சர்க்கார்' படத்துடன், ஆர்.கே.சுரேஷ் நடித்த `பில்லா பாண்டி' படம் மோதியது குறிப்பிடத்தக்கது.

`வேட்டை நாய்' படத்தை இயக்கியிருக்கும் எஸ்.ஜெய்சங்கர் ஏற்கனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி, `மன்னாரு' படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். அந்த படத்தை மறைந்த டைரக்டர் பாலுமகேந்திரா பாராட்டி இருந்தார்.

`வேட்டை நாய்' படத்தின் கதாநாயகன் ஆர்.கே.சுரேசுக்கு ஜோடியாக சுபிக்‌ஷா நடித்து இருக்கிறார். இவர், `கடுகு' படத்தில் நடித்தவர். படத்தை பற்றி டைரக்டர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:-

``இந்த படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். ஆனால், அடிப்படையில் நல்லவன். அப்படிப்பட்டவனை ஒரு பெண் உணர வைக்கிறாள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களே கதை.

பொதுவாகவே பெரிய நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த படம் வரும்போது, சிறு பட்ஜெட் படங்களை வெளியிட தயங்குவார்கள். ஆனால் படத்தின் மீது உள்ள நம்பிக்கையில், `வேட்டை நாய்' படத்தை `மாஸ்டர்' படத்துடன் களத்தில் இறக்குகிறோம்.''