டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை


டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை
x
தினத்தந்தி 19 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-19T22:35:02+05:30)

டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மிழில் 2011-ல் வெளியான அட்டக்கத்தி படம் மூலம் டைரக்டராக  அறிமுகமானவர் பா.ரஞ்சித். பின்னர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி மேலும் பிரபலமானார். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கி மென்மேலும் பிரபலமானார். ‘நீலம் புரொடக்‌ஷன்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்றது. ரஞ்சித், 2012-ல் அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த  நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். ரஞ்சித்துக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஞ்சித், இப்போது ஆர்யா நடிக்கும் ‘சல்பேட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.

Next Story