சினிமா செய்திகள்

நாகசைதன்யா கிடைத்தது அதிர்ஷ்டம் நல்ல வேளை முதல் காதலரை பிரிந்தேன் -நடிகை சமந்தா + "||" + Naga Chaitanya is the lucky one I got - Actress Samantha

நாகசைதன்யா கிடைத்தது அதிர்ஷ்டம் நல்ல வேளை முதல் காதலரை பிரிந்தேன் -நடிகை சமந்தா

நாகசைதன்யா கிடைத்தது அதிர்ஷ்டம்  நல்ல வேளை முதல் காதலரை பிரிந்தேன்  -நடிகை சமந்தா
நாக சைதன்யா எனது வாழ்க்கையில் கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை  காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவை  மணப்பதற்கு முன்னால் விவாகரத்தான ஒரு நடிகரும், சமந்தாவும் காதலித்து வந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் முன்னாள் காதல் பற்றி சமந்தா மனம் திறந்து பேசி உள்ளார். ஏற்கனவே நடிகர் ஜெமினி கணேசனுக்கு 2-ம் தாரமான நடிகை சாவித்ரி கடைசி காலத்தில் சொத்துகளை இழந்து கஷ்டப்பட்டு இறந்தார்.

முன்னாள் காதலரை திருமணம் செய்து இருந்தால் தனக்கும் சாவித்ரியின் நிலைமை ஏற்பட்டு இருக்கும் என்று சமந்தா தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சொந்த வாழ்க்கையில் நானும் நடிகை சாவித்ரி போல் வறுமையில் சிக்கி இருப்பேன். ஆனால் நல்ல நேரம் நான் அந்த உறவில் மாட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்டு வெளியே வந்து விட்டேன். அந்த காதல் நல்லது அல்ல என்பதை உணர்ந்து பிரிந்து விட்டேன். நாக சைதன்யா எனது வாழ்க்கையில் கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என்று  கூறியுள்ளார்.

இது தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.