கேன்ஸ் திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு


கேன்ஸ் திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 March 2020 5:46 AM GMT (Updated: 2020-03-20T11:16:21+05:30)

கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரிஸ்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா மிகவும் பிரபலமானது. நடப்பு ஆண்டு வரும்  மே  12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. 

ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட உள்ளது.  விழாவில் 40 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்பதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்படும் இந்த நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story