சினிமா செய்திகள்

பயணங்களை தவிர்க்க ராதிகா ஆப்தே யோசனை + "||" + Radhika Apte idea to avoid trips

பயணங்களை தவிர்க்க ராதிகா ஆப்தே யோசனை

பயணங்களை தவிர்க்க ராதிகா ஆப்தே யோசனை
இந்தி நடிகை ராதிகா ஆப்தே பயணங்களை தவிர்க்க யோசனை கூறினார்.
ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகை  ராதிகா ஆப்தே லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனிடிக் டெய்லரை  திருமணம் செய்து அங்கேயே வசிக்கிறார். தற்போது இந்தியா திரும்பி உள்ள அவர் கூறும்போது, “நான் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு  வரும்போதெல்லாம் விமானத்தில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது இந்தியா திரும்பியபோது, விமானத்தில் கூட்டமே இல்லாமல் காலியாக இருந்தது. என்னை பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன். தேவையற்ற பயணங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.