மேலும் 2 நடிகைகளுக்கு கொரோனா


மேலும் 2 நடிகைகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 March 2020 10:45 PM GMT (Updated: 2020-03-20T23:53:21+05:30)

நடிகை ஒல்கா குரிலென்கோ, நடிகர் இத்ரிஸ் எல்பா ஆகிய மேலும் 2 ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கியது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் இதனால் இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். நடிகை ஒல்கா குரிலென்கோ, நடிகர் இத்ரிஸ் எல்பா ஆகிய மேலும் 2 ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கியது.

ஒல்கா குரிலென்கோ, ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சொலாஸ், டாம்குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் இத்ரி எல்பா தோர், பசிபிக் ரிம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரிலும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ், ஆப்டர் டெத், த திங்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமான கிறிஸ்டோபர் ஹிவ்ஜுவும் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்சியார் இட்னோ ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்திரா வர்மா உலகம் முழுவதும் பிரபலமான கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் எல்லாரியா சாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர். பெரனாய்டு, பிரைடு அண்ட் பிரஜூடியஸ், எக்ஸோடு உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்து  இருக்கிறார்.

இந்திரா வர்மா தனக்கு வைரஸ் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இவர் தற்போது லண்டனில் வசிக்கிறார். இட்சியார் இட்னோ உலக புகழ் பெற்ற மணி ஹெய்ஸ்ட் தொலைக்காட்சி தொடரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். கொரோனாவுக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Next Story