திரையுலகை மிரட்டும் கொரோனா திரிஷா கொரோனா விழிப்புணர்வு


திரையுலகை மிரட்டும் கொரோனா   திரிஷா கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 20 March 2020 10:45 PM GMT (Updated: 20 March 2020 6:48 PM GMT)

நடிகை திரிஷா கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

நடிகை திரிஷா தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19. இது நம்மை பாதிக்காமல் தடுத்துக்கொள்ள முடியும். அதற்கு, நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் வந்தாலோ, தும்மல் வந்தாலோ உடனே கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை குப்பை தொட்டியில் போட்டு மூட வேண்டும். உங்கள் கண், மூக்கு, வாயை தேவை இல்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி இருபது வினாடிகளாவது சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும். கூட்டமாக இருக்கும் இடத்துக்கு போவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு இருமல், காய்ச்சல் வந்தாலோ, மூச்சு விட கஷ்டமாக இருந்தாலோ மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் பக்கத்தில் இருக்கிற சுகாதார மையம் அல்லது டாக்டரை பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது துணியாலாவது மூடிக்கொள்ள வேண்டும்

மேலும் விவரங்களுக்கு தமிழக அரசின் 94443 40496, 044 2951 0500, 87544 48477, 044 2951 0400 எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்.”

இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு திரையுலகமும் தப்பவில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கி உள்ளது. நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்தியாவில் திரையரங்குகள் அனைத்தையும் மூடி, சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்துள்ளனர். ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் மூடப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் நடந்து வந்த ஹாலிவுட் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story