சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய படம் சோல்ஜர்? + "||" + Vijay's new movie Soldier?

விஜய்யின் புதிய படம் சோல்ஜர்?

விஜய்யின் புதிய படம் சோல்ஜர்?
விஜய்யின் புதிய படம் ‘சோல்ஜர்’ என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் 65-வது படம் பற்றிய எதிர்பார்ப்பும், இயக்குனர் யார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், அஜய் ஞானமுத்து ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.

இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று முருகதாஸ் ஏற்கனவே கூறி வந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் துப்பாக்கி 2-ம் பாகத்தின் தலைப்பு ‘சோல்ஜர்’ என்று சமூக வலைத்தளத்தில் தகவல் வைரலாகி வருகிறது. தளபதி 65 என்ற ஹெஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். துப்பாக்கி படத்தில் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்து பயங்கரவாதிகளை களையெடுப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.

2-ம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. கொரோனா பாதிப்புகள் அடங்கியதும் துப்பாக்கி-2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...