நடிப்புக்கு அனுபவம் உதவுகிறது -தமன்னா


நடிப்புக்கு அனுபவம் உதவுகிறது -தமன்னா
x
தினத்தந்தி 20 March 2020 11:15 PM GMT (Updated: 2020-03-21T01:09:25+05:30)

நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அனுபவம் உதவுகிறது என்று நடிகை தமன்னா கூறினார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் தமன்னா. பாகுபலி, திருப்புமுனை படமாக அமைந்தது. இந்தி படங்களிலும் நடிக்கிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவுக்கு வந்த புதிதிலும் சரி, இப்போதும் சரி முடிவுகள் எடுப்பதில் திறமைசாலி. முன்பெல்லாம் பட உலகம் மகிழ்ச்சியாக இருந்தது. நடிக்க வந்தபோது எது வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனக்கு வயது அப்படி. அப்போது வந்த கதையில் எல்லாம் நடித்தேன்.

அது எனக்கு நல்லதாகவே அமைந்தது. அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததும் இன்னும் சந்தோஷமாக இருந்தது. இப்போது நான் முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அனுபவங்கள் கிடைத்துள்ளது. எண்ணங்களிலும் மாற்றம் வந்துள்ளது. இப்போது நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அனுபவம் உதவியாக இருக்கிறது.

எப்போதுமே தவறான முடிவுகளை நான் எடுத்தது இல்லை. சினிமாவுக்கு வந்த புதிதிலும் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தேன். இப்போதும் அப்படித்தான் நடிக்கிறேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.

Next Story