சினிமா செய்திகள்

கொரோனாவால் தொழிலாளர்கள் பாதிப்பு: பணம் இருப்பவர்கள் உதவுங்கள் - நடிகை காஜல் அகர்வால் + "||" + Workers affected by Corona: Help those who have money - Kajal Aggarwal

கொரோனாவால் தொழிலாளர்கள் பாதிப்பு: பணம் இருப்பவர்கள் உதவுங்கள் - நடிகை காஜல் அகர்வால்

கொரோனாவால் தொழிலாளர்கள் பாதிப்பு: பணம் இருப்பவர்கள் உதவுங்கள் - நடிகை காஜல் அகர்வால்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு, பணம் இருப்பவர்கள் உதவுங்கள் என நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கூறியதாவது:-

“நான் ஒரு வாடகை காரில் பயணித்தேன். காரின் டிரைவர் கடந்த 48 மணி நேரத்தில் எனது காரில் பயணம் செய்தது நீங்கள்தான் என்று கண்ணீர் மல்க கூறினார். எனது மனைவி தினமும் மளிகை சாமான்கள் வாங்கி வரும்படியும் கூறியும் என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை. வீட்டில் எதுவும் இல்லை. குழந்தைகள் சாப்பிட உணவும் இல்லை என்றார்.


இன்று நீங்கள் தரும் பணத்தில் மனைவி கேட்ட மளிகை சாமான்களை வீட்டுக்கு வாங்கி செல்ல முடியும் என்று கூறினார். அவர் சொன்னதை கேட்டதும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது, கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் எல்லா துறைகளையும் தாக்கி இருக்கிறது. தொழிலாளர்கள் வாழ்க்கை மிகவும் பாதித்து இருக்கிறது.

வாடகை கார் டிரைவர் சொன்னதை கேட்டதுமே எனது கண் கலங்கியது. கொரோனா இவர்களை போன்றவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறது. என்னிடம் கஷ்டத்தை சொன்ன அந்த டிரைவருக்கு கூடுதலாக பணம் கொடுத்தேன். என்னை போன்றவர்களுக்கு ஐநூறு, ஆயிரம் ரூபாய் சிறிய விஷயம்தான். ஆனால் அவர்களுக்கு அது பெரிய உதவி. இது மாதிரி தொழில் செய்ய முடியாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு பணம் இருப்பவர்கள் எல்லோரும் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்து இந்த கஷ்ட காலத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும்”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் ?
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
2. கொரோனாவை தொடர்ந்து புதிய வைரஸ் பரவல்: சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார நிறுவனம்
கொரோனா வைரசைத் தொடர்ந்து புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.
3. ‘கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசு முயற்சி’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
“கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கங்கள் முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
4. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்கிறார்கள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முகமது ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர்.
5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாநகரில் காலை 9 மணி வரை மட்டுமே டீக்கடைகள் செயல்படும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-