சினிமா செய்திகள்

சிறையில் இருக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா + "||" + Harvey Weinstein tests positive for coronavirus in prison

சிறையில் இருக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா

சிறையில் இருக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா
பாலியல் வழக்கில் சிறையிலிருக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூவில் புகார் கூறப்பட்டது.

ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.

2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது

தற்போது ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. 

கடந்த 2 வாரமாக நியூயார்க் சிறையில் இருக்கும் ஹார்வி வெயின்ஸ்டீன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

.ஹார்வி வெய்ன்ஸ்டீன் புதன்கிழமை நியூயார்க் நகரத்திற்கு வடமேற்கே 350 மைல் (560 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பப்பலோ அருகே உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். அதற்கு முன்பு, அவர் ரைக்கர்ஸ் தீவு சிறை மற்றும் ஒரு மன்ஹாட்டன் மருத்துவமனையில் தங்கியிருந்தார், அங்கு அவருக்கு நெஞ்சு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக  400 பேர் இறந்துள்ளனர், 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவை நியூயார்க் மாநிலத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
2. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனா பாதிப்பு; மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,695 ஆக உயர்வு
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மிக அதிகளவாக மராட்டியத்தில் 1,695 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.