சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்த பிரகாஷ்ராஜ்


சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்த பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 25 March 2020 12:47 AM GMT (Updated: 2020-03-25T06:17:30+05:30)

தன்னிடம் வேலை செய்பவர்களின் சம்பளத்தை முன்கூட்டியே நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுத்துள்ளார்.


பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“நான் சேர்த்து வைத்துள்ள பணத்தை பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள், எனது உதவியாளர்கள் ஆகிய அத்தனை பணியாளர்களுக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்.

தற்போதைய சூழ்நிலையில் நின்றுபோன எனது மூன்று படங்களிலும் வேலைபார்த்த தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது பாதி சம்பளத்தை வழங்க முயற்சி செய்வேன். என்னால் முடிந்த வரை மேலும் உதவிகள் செய்வேன். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் இது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக இருப்போம்.”

இவ்வாறு கூறியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த செயலை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Next Story