சினிமா செய்திகள்

இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் - டைரக்டர் சேரன் + "||" + Noise-free Chennai birds - Director Cheran

இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் - டைரக்டர் சேரன்

இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் - டைரக்டர் சேரன்
இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் பறப்பதை பார்க்க முடிவதாக டைரக்டர் சேரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. மக்கள் ஊரடங்கில் பொதுமக்கள் யாரும் வெளியே வராததால் நாடே வெறிச்சோடி காணப்பட்டது. இரைச்சல் இல்லா சூழ்நிலையில் பறவைகள் பறப்பதை பார்க்க முடிகிறது என்று டைரக்டர் சேரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் “‘வாகன புகைமூட்டங்களும், இரைச்சலும் இல்லாததால் சென்னை நகரத்தில் நிறைய பறவைகள் பறப்பதை காண முடிகிறது. அனைத்தும் இரைதேடி மொட்டை மாடிகளில் அமர்கிறது. எப்போதும் 20 புறாக்கள் வரும் இடத்தில் இன்று 50-க்கும் மேல். வீட்டில் இருக்கும் நண்பர்கள், பறவைகளுக்கு இரை வைக்க குழந்தைகளை பழக்குங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.