சினிமா செய்திகள்

திரிஷா விலகிய படத்தில் நடிக்கிறேன் - காஜல் அகர்வால் + "||" + I am acting in the movie Trisha quit - Kajal Agarwal

திரிஷா விலகிய படத்தில் நடிக்கிறேன் - காஜல் அகர்வால்

திரிஷா விலகிய படத்தில் நடிக்கிறேன் - காஜல் அகர்வால்
திரிஷா விலகிய படத்தில் தான் நடிப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

திரிஷா விலகிய தெலுங்கு படத்தில் அவருக்கு பதிலாக தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதை காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.


இந்த படத்தை கொரட்டல்லா சிவா இயக்குகிறார். 5 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்க இருந்த தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை தொடங்க தயாரான நிலையில் திரிஷா திடீரென்று ஆச்சார்யா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த படத்தில் இன்னொரு கதாநாயகி நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் அளித்து இருந்ததுமே திரிஷா விலகலுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிஷாவுக்கு பதிலாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசி வந்தனர். தற்போது அவர் தேர்வாகி உள்ளார்.

இதுகுறித்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள வீடியோவில் “சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். மேலும் சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன்-2’ படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கிறார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திலும் நடிக்கிறார்.