சினிமா செய்திகள்

காதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர் + "||" + Isolated with girlfriend Titanic actor

காதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர்

காதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர்
கொரோனா தொற்று ஏற்பட்டது காரணமாக காதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர்.
ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது கொரோனா பாதிப்பில் சிக்கினர். இதுபோல் நடிகர்கள் இத்ரி எல்பா, கிறிஸ்டோபார் ஹிவ்ஜு, நடிகை ஓல்கா குரிலென்கோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஓல்கா குரிலென்கோ குணமாகி உள்ளார்.

இந்த நிலையில், டைட்டானிக் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, கொரோனாவுக்காக தன்னை தனிமைப்படுத்தி இருக்கிறார். இவருக்கும், மாடல் அழகி கேமிலா மோரோனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் முகத்தை மறைத்தபடி ஜோடியாக வெளியே சென்று சுற்றிவரும் படங்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அவற்றை பொருட்படுத்தாமல் காதலை தொடர்கிறார்கள். இந்த நிலையில், லியனார்டோ டிகாப்ரியோவும், கேமிலா மோரோனும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வெளியே செல்வதையும், மற்றவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.