சினிமா செய்திகள்

அம்மா- அப்பாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் - மாளவிகா மோகனன் + "||" + Mom- For Dad I'm at home Malavika Mohanan

அம்மா- அப்பாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் - மாளவிகா மோகனன்

அம்மா- அப்பாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் - மாளவிகா மோகனன்
அம்மா- அப்பாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அடங்கியதும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனாவை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளது. நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வெளியே சுற்றாமல் அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

இளைஞர்களைவிட வயதானவர்களைத்தான் கொரோனா அதிகமாக காவு வாங்குவது தெரிய வந்துள்ளது. இதனால் வயதானவர்கள் நலனுக்காக வீட்டில் இருங்கள் என்றும் வற்புறுத்தப்படுகிறது. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனனும், எனது அம்மா- அப்பாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் என்ற ஆங்கில வாசக அட்டையை பிடித்தபடி தனது புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். எனது பெற்றோர்கள், சகோதரர், அன்புக்குரியவர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் முக்கியம். நாம் பொறுப்பு இல்லாமலும், அலட்சியமாகவும் இருந்தால் தீங்கு ஏற்படும். எனவே வீட்டில் இருந்து நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.