சினிமா செய்திகள்

இந்தியாவில் பரவினால்... வரலட்சுமி எச்சரிக்கை + "||" + If it spreads in India ... Varalakshmi Warning

இந்தியாவில் பரவினால்... வரலட்சுமி எச்சரிக்கை

இந்தியாவில் பரவினால்... வரலட்சுமி எச்சரிக்கை
அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில்தான் இருக்கிறேன்

நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

“‘அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில்தான் இருக்கிறேன். கொரோனா நமக்கு வராது என்று சிலர் சுற்றுகிறார்கள். கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதன் ஆபத்து யாருக்கும் புரிவதில்லை. ‘காண்டேஜியன்’ என்ற ஒரு படம் உள்ளது. அந்த படத்தை பார்த்தாலே இந்த தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது என்று புரியும்.

அக்கம்பக்கத்தில் நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தள்ளி நின்று உதவி செய்யுங்கள். வாடகை வாங்குபவர்கள் ஒரு மாதத்துக்காவது வாடகையை தள்ளுபடி செய்யுங்கள். அப்படிச் செய்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். நிறையப் பேர் பயப்படுகிறார்கள். அது வேண்டாம். அரசாங்கம் கடைகளை திறந்து வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. ஆகவே, பயப்பட வேண்டாம். ஜாலியாக வெளியே சுற்றி, கொரோனாவை இந்தியா முழுக்க பரப்பி, இறப்பை அதிகரிக்காமல் ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்திருங்கள். இந்தியாவில் 134 கோடி மக்கள் இருக்கிறார்கள். இத்தாலி மாதிரி சின்ன நாடு அல்ல. ஆகவே இங்கு பரவியது என்றால்.. கொஞ்சமாவது புத்தியை உபயோகியுங்கள். தயவுசெய்து வீட்டில் இருங்கள்.”

இவ்வாறு வரலட்சுமி கூறியுள்ளார்.