சினிமா செய்திகள்

அமாவாசையில் கைதட்டினால் வைரஸ் அழியுமா? - அமிதாப்பச்சன் கருத்துக்கு எதிர்ப்பு + "||" + Applause at New Moon Virus Aliyuma? Amitabh resistant to consider

அமாவாசையில் கைதட்டினால் வைரஸ் அழியுமா? - அமிதாப்பச்சன் கருத்துக்கு எதிர்ப்பு

அமாவாசையில் கைதட்டினால் வைரஸ் அழியுமா? - அமிதாப்பச்சன் கருத்துக்கு எதிர்ப்பு
அமாவாசையில் கைதட்டினால் வைரஸ் அழியுமா என்ற அமிதாப்பச்சன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீட்டு மாடிகளில் நின்று கைதட்டி ஒலி எழுப்பினார்கள். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள்-நடிகைகளும் கைதட்டியும், மணி அடித்தும் நன்றியை வெளிப்படுத்தினர். அப்போது சிலர் வெளியே கூட்டமாக நின்று கைதட்டியது சமூக ஆர்வலர்களால் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மார்ச் 22-ந்தேதி மாலை 5 மணி, என்பது ‘அமாவாசை’, மாதத்தின் இருண்ட நாள். வைரஸ், பாக்டீரியா மற்றும் தீய சக்திகளுக்கு அப்போது அதிக சக்தி இருக்கும். அந்த நேரத்தில் கைதட்டுவதால் உருவாகும் அதிர்வுகள் மூலம் வைரஸ் தாக்கம் குறையும். ரத்த ஓட்டம் சீர்படும்.” என்று குறிப்பிட்டு இருந்தார். இது மூடநம்பிக்கை என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த பதிவை அமிதாப்பச்சன் நீக்கி உள்ளார்.