சினிமா செய்திகள்

பலருக்கு கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை - சிவகார்த்திகேயன் வருத்தம் + "||" + Many people do not know the severity of the corona Sivakarthikeyan regret

பலருக்கு கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை - சிவகார்த்திகேயன் வருத்தம்

பலருக்கு கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை - சிவகார்த்திகேயன் வருத்தம்
பலருக்கு கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை என்று சிவகார்த்திகேயன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

இந்த வீடியோ கொரோனா வைரசைப் பற்றியதுதான். அவர்களுடைய உடல் நலம், குடும்பத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சல்யூட். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். அவசரத் தேவை என்றால் மட்டும் வெளியே வாருங்கள். 

இன்னும் கொரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு 10 அல்லது 20 பேருக்காவது இந்த வீடியோ போய் சேர வேண்டும். வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள். முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பதுதான். அப்படி செய்தாலே இந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதை அனைத்தையும் முறியடிக்க முடியும். உலகத்தின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.