சினிமா செய்திகள்

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார் + "||" + Actor Sethuraman passes away

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதாநாயகன் சேதுராமன் மாரடைப்பால் உயிழந்தார்.
சென்னை,

கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். 

மருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி வந்த இவர், மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. 

இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்.
2. தமிழ் திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
தமிழ் திரைப்பட நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
3. ‘தினமலர்' பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது
‘தினமலர்' பத்திரிகை முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் நேற்று காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.