சினிமா செய்திகள்

ஊரடங்கால் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் -ஜான்வி கபூர் + "||" + Janhvi Kapoor pens emotional post in self-quarantine: I feel most liberated in this lockdown

ஊரடங்கால் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் -ஜான்வி கபூர்

ஊரடங்கால் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் -ஜான்வி கபூர்
ஊரடங்கால் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கால் வீட்டில் தனிமையில் இருக்கும் ஜான்வி கபூர், தனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு கடித்தத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“ஊரடங்கால் நான் சாப்பிடும் உணவின் முக்கியத்தை அறிந்து கொண்டேன். எங்கள் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய உணவுகள் ஊரடங்கு முடியும் வரை இருக்குமா? என்று தெரியவில்லை. ஒருவர் மளிகை பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைத்து வெளியில் செல்வதை இதற்கு முன்பு நான் யோசித்து பார்த்தது கூட இல்லை. வாழ்க்கையில் சுயநலத்தோடும், பொறுப்பு இல்லாமலும் நான் இருந்ததை இந்த ஊரடங்கு எனக்கு உணர்த்தி இருக்கிறது. ஊரடங்குக்கு முன்னால் எனது தந்தையின் பாசத்தை அறியாமல் இருந்தேன். எங்களுக்காக வீட்டில் காத்திருப்பதையும் யோசிப்பது இல்லை.

இப்போது அவருடனேயே இருக்கும் தருணங்களில் அவற்றை யோசித்து பார்க்கிறேன். வீட்டில் உள்ளவர்களை கவனிக்க வேண்டும். அவர்களின் ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்று உணர்ந்து இருக்கிறேன்”.


தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.
3. மதுரையில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு: வீடுகளைவிட்டு வெளிவராத மக்கள்
மதுரையில் நேற்று எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளை விட்டு வெளிவரவில்லை.
4. மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5. பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை- எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை என்று எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.