சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு பிறகும் வவ்வால், தேளை உண்பதா? சீனர்களை கண்டித்த இந்தி நடிகை + "||" + Hindi actress who denounced Chinese

கொரோனாவுக்கு பிறகும் வவ்வால், தேளை உண்பதா? சீனர்களை கண்டித்த இந்தி நடிகை

கொரோனாவுக்கு பிறகும் வவ்வால், தேளை உண்பதா? சீனர்களை கண்டித்த இந்தி நடிகை
இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களை கடுமையாக சாடி உள்ளார்.

சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் ழுழுவதும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரசால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். உகானில் உள்ள சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுகின்றன.

இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாக கூறப்படுகிறது. கிருமியால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சந்தையில் வேலை பார்த்தவர்கள்தான். தற்போது சீனாவில் வைரஸ் தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளனர்.

இதை கேள்விப்பட்ட இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களை கடுமையாக சாடி உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “‘கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் தின்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று கண்டித்துள்ளார். இறைச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவாக மேலும் ஏராளமானோர் சீனர்களை திட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,218 பேருக்கு கொரோனா தொற்று
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது
2. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
4. கொரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு
குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
5. இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் - மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.