சினிமா செய்திகள்

ஜோர்டானில் 57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ் -ஊர்திரும்ப விரும்புவதாக உருக்கம் + "||" + Actor Prithviraj Sukumaran Posts From Lockdown In Jordan Desert Camp With Film Crew

ஜோர்டானில் 57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ் -ஊர்திரும்ப விரும்புவதாக உருக்கம்

ஜோர்டானில் 57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ் -ஊர்திரும்ப விரும்புவதாக உருக்கம்
‘ஆடு ஜீவிதம்’ படப்பிடிப்புக்காக 57 பேருடன் ஜோர்டான் சென்று, தற்போது நாடு திரும்ப முடியாமல் நடிகர் பிரித்விராஜ் தவிக்கிறார்.
தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிரித்விராஜ், ‘ஆடு ஜீவிதம்’ படப்பிடிப்புக்காக 57 பேருடன் ஜோர்டான் சென்று, தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“கொரோனாவால் கடந்த 27-ந்தேதி எங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பாலைவனக் கூடாரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 2-வது வாரம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதால் அதற்கான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. குழுவில் உள்ள மருத்துவர் 72 மணிநேரத்துக்கு ஒருமுறை எங்களை பரிசோதனை செய்கிறார். ஊருக்கு திரும்ப ஆவலாக இருக்கிறோம். உலகம் தற்போது இருக்கும் சூழலில் எங்களை மீட்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பது புரிகிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். வாய்ப்பு அமையும்போது ஊருக்கு வருவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் என்று நம்புவோம்”. இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்-மந்திரிக்கு கேரள பிலிம்சேம்பர் தகவல் தெரிவித்து பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் பத்திரமாக அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.
2. மதுரையில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு: வீடுகளைவிட்டு வெளிவராத மக்கள்
மதுரையில் நேற்று எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளை விட்டு வெளிவரவில்லை.
3. மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
4. பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை- எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை என்று எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
5. ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 7 பேர் - சுங்கச் சாவடியில் மடக்கிப் பிடித்த போலீஸ்
ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் பிடிபட்டனர்.